அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்த தூதரக கட்டிடம்! எத்தனை டொலர்கள் தெரியுமா?
பாகிஸ்தானின் தூதரக கட்டிடம் ஒன்று அமெரிக்காவில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தூதரக கட்டிடம்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பாகிஸ்தானுக்கு சொந்தமான 3 தூதரக கட்டிடங்கள் உள்ளன. அவற்றில் மாஸசூடெஸ் அவென்யூயில் உள்ள தூதரக கட்டிடம் செயல்பாட்டில் இல்லாததால் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
1950ஆம் முதல் 2000ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த இந்த கட்டிடத்தை விற்க பாகிஸ்தான் முடிவு செய்தது. அதன்படி ஏலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், யூத குழு மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் முனைப்பு காட்டினர்.
அதிக ஒப்பந்தப்புள்ளி கோரிய யூத குழு
குறித்த தொழிலதிபர் 5 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியபோது, யூத குழுவானது 6.8 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதன்மூலம் யூத குழுவிற்கு தூதரக கட்டிடம் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தூதரக கட்டிடத்தை கைப்பற்றும் பட்சத்தில், அதனை யூத மத வழிபாட்டு தலமாக மாற்றியமைக்க அந்த குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.