தென் ஆப்பிரிக்க கேப்டன் சொன்ன ஒரு வார்த்தை! தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதை பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்கா சாதனை வெற்றி
புனேவில் நடந்த உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 190 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை படைத்தது.
அதாவது, கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வெற்றி கொண்டுள்ளது.
cricketworldcup
டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்த சாதனையை செய்துள்ள நிலையில், பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
வெற்றியை சமர்ப்பித்த பவுமா
ஏனெனில், நியூசிலாந்தின் தோல்வி பாகிஸ்தானின் அரையிறுதிக்கு ஒரு படியாக அமைந்துள்ளது. அத்துடன் இந்த வெற்றியை, விசா கிடைக்காத நமது பாகிஸ்தான் சகோதரர்களுக்கு சமர்ப்பணம் செய்து, அவர்களது அணியை அவர்கள் உற்சாகப்படுத்த விரும்புகிறேன் என பவுமா போட்டிக்கு பின் கூறினார்.
இந்த இரு காரணங்களுக்காகவும் பவுமாவை பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
நியூசிலாந்து அணி எஞ்சிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்தால் பாகிஸ்தானுக்கு மேலும் அரையிறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.
வரும் 4ஆம் திகதி பெங்களுருவில் நடைபெற உள்ள போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |