ஒரே இரவில் அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரான மீனவர்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் மீனவர் ஒருவர் அரியவகை மீன்களை ஏலம் விட்டு ஒரே இரவில் கோடீஸ்வரராகியுள்ளார்.
Sowa என்ற அரியவகை மீன்
மீனவர் ஏலம் விட்ட அந்த மீனில் மருத்துவ குணங்கள் அதிகம் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கராச்சி பகுதியில் இப்ராஹிம் ஹைதேரி மீனவ கிராமத்தில் குடியிருந்து வருபவர் Haji Baloch.
இவரும் இவரது சக மீனவர்களும் சேர்ந்தே கோல்டன் ஃபிஷ் அல்லது Sowa என்ற அரியவகை மீனை பிடித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை கராச்சி துறைமுகத்தில் அந்த மீன்கள் அத்தனையும் சுமார் 70 மில்லியன் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சோவா மீன் விலைமதிப்பற்றதாகவும் அரிதானதாகவும் கருதப்படுகிறது, அதன் வயிற்றில் உள்ள பொருட்கள் சிறந்த குணப்படுத்தும் மற்றும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன.
மேலும் ஒரு மீன் மட்டும் 7 மில்லியன் அளவுக்கு விலை போயுள்ளது பொதுவாக சோவா மீன் ஒன்று 20 முதல் 40 கிலோ வரையில் எடை இருக்கும் எனவும் 1.5 மீற்றர் வரையில் வளரக்கூடியது என்றும் கூறுகின்றனர்.
சோவா மீன் பெரும்பாலும் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |