ரோஹித் அதனை நிரூபித்துவிட்டார்! கிளாஸ்தான் நிரந்தரம்..புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்
இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவின் துடுப்பாட்டத்தை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் பாசித் அலி வெகுவாக பாராட்டியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா 119 ஓட்டங்கள் விளாசினார்.
தன் மீதான கடுமையான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், நீண்ட இடைவெளிக்கு பின் அவர் சதம் அடித்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் வீரரான பாசித் அலி சதம் விளாசிய ரோஹித் ஷர்மாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "சுமாரான பார்மில் இருக்கும்போது மெதுவாக விளையாடி சதத்தை அடிக்க வேண்டும் என்று ரோஹித் ஷர்மா நினைக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர் டக் அவுட்டாவது மோசமான விடயமாக இருக்கும்.
ஆனால், தன்னுடைய இயற்கையான ஆட்டத்தின் மூலம் எதிரணியை வீழ்த்த வேண்டும் என்ற வகையில் விளையாடி ரோஹித் ஷர்மா, தன்னுடைய செயல்பாடுகளால் அனைவரையும் அமைதிப்படுத்தினார். நாம் அடிக்கடி பார்ம் என்பது தற்காலிகமானது, கிளாஸ் நிரந்தரமானது என்று கூறுவோம். அதனை ரோஹித் ஷர்மா நிரூபித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |