வெளிநாட்டில் பாத்திரம் கழுவினோம்; அனாதையாக நின்றோம் - பாகிஸ்தான் கேப்டன் குற்றச்சாட்டு
விளையாட சென்ற நாட்டில் பாகிஸ்தான் வீரர்கள் பாத்திரம் கழுவ வேண்டிய சூழல் இருந்ததாக பாகிஸ்தான் ஹாக்கி அணி கேப்டன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் ஹாக்கி அணி
FIH புரோ லீக் ஹாக்கி தொடருக்காக அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணி, விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு(PHF) அவுஸ்திரேலியாவில் ஹொட்டல் கட்டணம் செலுத்தாததால் வீரர்கள் தங்க வேண்டிய அறைக்கான முன்பதிவு செய்யப்படவில்லை.
இதனால் பல மணி நேரங்கள் அவர்கள் உடமைகளுடன் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், போட்டி அன்று கூட அவர்களே பாத்திரங்களை கழுவ வேண்டிய சூழல் இருந்துள்ளது.
இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், தங்கள் நாட்டின் மானத்தை காப்பாற்ற அப்படி எதுவும் நடக்கவில்லை, இங்கே எல்லாம் நன்றாக நடக்கிறது என பாகிஸ்தான் ஹாக்கி அணித்தலைவர் ஷகீல் அம்மாத் பட் வீடியோ வெளியிட்டார்.
தோல்வியுடன் பாகிஸ்தான் திரும்பிய ஹாக்கி அணியை வரவேற்க விமான நிலையத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை.
வீரர்கள் பாத்திரம் கழுவினார்கள்
இதனையடுத்து, லாகூர் விமான நிலையத்தில் வைத்தே பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு மீது பாகிஸ்தான் ஹாக்கி அணித்தலைவர் ஷகீல் அம்மாத் பட் (Ammad Shakeel Butt) கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "எங்களுக்கு அணி நிர்வாகம் ஹொட்டல் ஏற்பாடு செய்து தரவில்லை. 12 மணி நேரம் அனாதையாக சுற்றி திரிந்தோம். வீரர்களே உணவு தயாரிக்கும் சூழல் இருந்தது. சுமார் 3 மணி நேரம் பாத்திரம் கழுவினார்கள்.
வீரர்களின் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்ய பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியிருந்தது.
ஆனால், 13 நாட்கள் தங்க வேண்டியிருந்த Airbnb தங்குமிடம் கூட 10 நாட்களுக்கு தான்ஏற்பாடு செய்யப்பட்டது. 3 நாட்கள் நாங்கள் மலிவான வீட்டிற்கு மாற வேண்டியிருந்தது.
படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை அவர்களே சுத்தம் செய்தார்கள். எங்களுக்கு சரியான ஓய்வு இல்லை. வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர். இப்படியான சூழலில் பாகிஸ்தானுக்காக நாங்கள் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்?
🚨 “I Lied On Video”: Pak Hockey Captain Admits Sydney Ordeal
— Nabila Jamal (@nabilajamal_) February 18, 2026
Ammad Shakeel Butt has admitted he falsely claimed everything was “fine” during Pakistan’s recent Australia tour. He says he was pressured by team management to protect the country’s image
During the FIH Hockey Pro… pic.twitter.com/QtrV0mZMjK
இது விளையாட்டு வாரியத்தின் தவறா அல்லது தவறா அல்லது ஹாக்கி கூட்டமைப்பின் தவறா என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் அணி நிர்வாகம் எங்களிடம் பலமுறை பொய் சொல்லியுள்ளது.
முன்னதாக, எனது நாட்டை அவதூறு செய்யக்கூடாது என அவுஸ்திரேலியாவில் எல்லாம் நன்றாக இருக்கிறது, அணிக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டேன்.
ஆனால் அது உண்மை இல்லை. எங்கள் அணி குறித்து ஆஸ்திரேலியாவில் வெளிவந்த செய்திகள், வீடியோக்கள் அனைத்தும் உண்மையே.
விசாரணைக்கு உத்தரவு
அவுஸ்திரேலியாவில் நடந்த அநீதிகள் குறித்து ஊடகத்திடம் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என PHF எச்சரித்தது. ஹாக்கி கூட்டமைப்பின் தற்போதைய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற முடியாது.
எங்களிடம் நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால் எங்களுக்கு நல்ல நிர்வாகமும், வெளிநாட்டு பயிற்சியாளரும் தேவை” என கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |