ஊசலாடும் பாகிஸ்தானின் உலகக்கோப்பை கனவு! இதெல்லாம் நடந்தால் மட்டுமே அரையிறுதி சாத்தியம்
உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச அணியை மிரட்டலாக வீழ்த்தியிருந்தாலும், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல சில போட்டிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணி சாம்பியன்
1992ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றது. அதன் பின்னர் 31 ஆண்டுகளாக இரண்டாவது கோப்பைக்காக பாகிஸ்தான் போராடி வருகிறது.
AP
ஒரு காலத்தில் பந்துவீச்சில் சிறப்பான அணியாக விளங்கிய பாகிஸ்தான் அணியில் தற்போது ஷாஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ராஃப், வாசிம், ஹசன் அலி போன்ற நல்ல பந்துவீச்சாளர்கள் இருந்தாலும் பெரிதளவில் அவர்களது பந்துவீச்சு அச்சுறுத்தலாக அமையவில்லை.
PTI
முதல் இரண்டு போட்டிகளில் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக) மிரட்டலாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் அதன் பின்னர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்தது.
இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்தாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் அடைந்த தோல்விதான் கடும் விமர்சனங்களை பெற்றது.
PTI
அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியிடம் கையில் இருந்த போட்டியை சொதப்பலான பந்துவீச்சு காரணமாக இறுதிக்கட்டத்தில் இழந்தது.
கேப்டன் தடுமாற்றம்
பாகிஸ்தானின் தொடக்க வீரர்கள் ஓரளவு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடினாலும், கேப்டன் பாபர் அசாம் தொடர்ந்து தடுமாறி வருகிறார்.
AP
ரிஸ்வான் மட்டுமே துடுப்பாட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.
இதனால் பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் மோசமாக உள்ளது. இதுவே அணிக்கு பெரிய சிக்கலாகவும் இருக்கிறது.
அரையிறுதிக்கு தகுதி பெற உள்ள வாய்ப்புகள்
பாகிஸ்தான் 4 போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வந்த நிலையில், நேற்று வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி கனவு துளிர்விட்டுள்ளது.
Aijaz Rahi/AP
அதாவது, பாகிஸ்தான் அடுத்ததாக நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் வெல்ல வேண்டும். ஆனாலும் சில போட்டிகளின் முடிவுகளும் சாதகமாக அமைய வேண்டும்.
- ஆப்கானிஸ்தானை அவுஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா வீழ்த்த வேண்டும்
- நியூசிலாந்தை தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் வீழ்த்த வேண்டும்
- இலங்கை மற்றும் நெதர்லாந்தை இந்திய அணி கண்டிப்பாக வீழ்த்த வேண்டும்
இந்த முடிவுகள் சரியாக நடந்து, பாகிஸ்தானும் தனது எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.
பாகிஸ்தான் தற்போது 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால் 5 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Twitter (ICC)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |