பாகிஸ்தானில் துன்புறுத்தப்படும் இந்திய பெண்: சர்ச்சை ஆடியோவால் வெடித்த பூகம்பம்
மதமாற்றம் செய்து கொண்டு பாகிஸ்தானில் வாழ்ந்து வந்த இந்திய பெண் ஒருவர் தன்னை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ளுமாறு கதறும் ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் திருமணம்
பஞ்சாப்பைச் சேர்ந்த 48 வயது சரப்ஜித் கவுர் என்ற நபர் கடந்த 2024ம் ஆண்டு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு 2000 சீக்கிய யாத்ரீகர்கள் உடன் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தார்.

யாத்திரை முடிந்து அனைவரும் திரும்பிய நிலையில் சரப்ஜித் கவுர் மட்டும் பாகிஸ்தானிலேயே தங்கியுள்ளார்.
அத்துடன் அங்கு அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னுடைய பெயரை நூர் என்று மாற்றிக் கொண்டதுடன் ஷேக்குபுரா பகுதியை சேர்ந்த நசீர் உசேன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அப்போது இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில் நசீர் உசேனை தன்னுடைய விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
வைரல் ஆடியோ
இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில், தன்னுடைய கணவர் நசீர் உசேன் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மிகவும் துன்புறுத்துவதாக இந்தியாவிலுள்ள குடும்பத்தினரிடம் சரப்ஜித் கவுர் கதறும் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் அந்த ஆடியோவில், இந்தியாவில் செல்வ செழிப்புடன் இருந்ததாகவும், தற்போது பாகிஸ்தானில் பணத்திற்காக கையேந்தி வருவதாகவும் பேசியுள்ளார்.
மேலும் பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க வரவில்லை என்றும், தன்னுடைய குழந்தைகளை விட்டு தன்னால் பிரிந்து இருக்க முடியவில்லை என்றும், தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை அழிக்கவே பாகிஸ்தானுக்கு வந்ததாகவும் அந்த ஆடியோவில் பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக கணவர் நசீர் உசேன் மற்றும் சரப்ஜித் கவுர் தம்பதியினர் முதலில் லாகூர் உயர்நீதிமன்றத்தில் நாடிய நிலையில் அதன் நிலைமை மோசமானதை அடுத்து இந்த சர்ச்சை ஆடியோ வெளியாகியுள்ளது.
தற்போது கணவர் நசீர் உசேன் மற்றும் சரப்ஜித் கவுர் இருவரும் பாகிஸ்தான் அதிகாரிகளின் பிடியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |