நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு: நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான் கான் அறிவுறுத்தல்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எதிராக கோரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை தேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி நிராகரித்துள்ளார்.
பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் முக்கிய அரசியல்வாதியான பிரதமர் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அகற்ற எதிர்கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டன, பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியை கலைக்க மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் 172 உறுப்பினர்களின் ஆதரவு எதிர்கட்சிக்கு தேவைப்பட்டது.
இந்தநிலையில் பிரதமர் இம்ரான் கான் எதிராக அவரது கட்சி உறுப்பினர்களே 17 பேர் எதிர்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியை கலைக்க போர்க்கொடி தூக்கினர்.
Surprise to those who looted Pakistan for over 30years ??#NoConfidenceMotion#PrimeMinisterImranKhan#ShahbazSharif#WeStandWithImranKhan#surprise pic.twitter.com/CjH4WLoPFy
— salmmaaann (@Call_me_salman) April 3, 2022
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது வெளிநாட்டு தலையீடுகளின் விளைவாக கோரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை தேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி நிராகரித்துள்ளார், மேலும் இது அரசியல் சாசனம் பிரிவு 5-க்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரிவு 5ன் படி "அனைவரும் நாட்டின் அரசியலை மதித்து அதனை பின்பற்றுவது அடிப்படை கடமையாகும் மற்றும் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு கீழ்ப்படிவது என்பது அவர் எங்கிருந்தாலும் ஒவ்வொரு பாகிஸ்தான் குடிமகனின் தவிர்க்க முடியாத கடமையாகும்".
وزیرِ اعظم پاکستان عمران خان کا قوم سے خطاب۔۔
— PTV News (@PTVNewsOfficial) April 3, 2022
3 اپریل 2022۔۔@ImranKhanPTI @PakPMO
1/2 pic.twitter.com/1wJKL03k8r
இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்ட பிறகு PTV செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த நேரலை பேட்டியில், தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்து விடுமாறு ஜனாதிபதிக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் எனவே தேர்தலுக்கு மக்கள் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, ராட்சச உலோக கலன்களை கொண்டு பாகிஸ்தானின் நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரசு கட்டிடங்களுக்கு செல்லும் சாலைகளை மரித்துள்ளன.