மனிதநேயத்திற்கு எல்லைகள் இல்லை! ஆப்கானிஸ்தானுக்காக உருகும் பாகிஸ்தான் வீரர்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நாம் ஒற்றுமையுடன் இருந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், சுமார் 1,000 மக்கள் பலியாகினர். மேலும் 1,500 பேர் படுகாயமடைந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அந்நாட்டு அரசு சர்வதேச நாடுகளிடம் உதவி கோரியுள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ராஷித் கானும், தங்கள் நாட்டு மக்களுக்கு உதவுங்கள் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
Photo Credit:
Bakhtar News Agency via AP
Saddened to hear about the earthquake in Afghanistan and the damage it has caused. My heart and prayers goes to all the people in Khost & Paktika. We all should stay united in this hard time and support them as much as we can.
— Muhammad Rizwan (@iMRizwanPak) June 22, 2022
Humanity has no boundaries. We all are one. ??
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் ஆப்கானிஸ்தான் மக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
'ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலத்த சேதமடைந்துள்ளதை அறிந்து வருத்தமடைந்தேன். கோஸ்ட் மற்றும் பாக்டிகா மக்களுக்காக நான் மனமார பிரார்த்தனை செய்கிறேன்.
இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு ஆதரவை அளிக்க வேண்டும். மனிதநேயத்திற்கு எல்லைகள் இல்லை. நாம் அனைவரும் ஒன்று' என உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.