துருக்கி, சிரியா மக்களை நினைத்து இதயம் நொறுங்கிவிட்டது! பிரபல கிரிக்கெட் வீரர்
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், துருக்கி-சிரியா மக்களுக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
பூகம்பத்தின் பேரழிவு
பூகம்பத்தின் கோரத்தால் துருக்கி, சிரியா நாடுகள் உருகுலைந்துள்ளன. பலி எண்ணிக்கை 8000-த்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகள் துருக்கி-சிரியாவுக்கு உதவ விரைந்துள்ளன. பிரபலங்கள் பலரும் இந்த பேரழிவினை குறிப்பிட்டு வேதனை மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
@AP Photo/ALsayed
முகமது ரிஸ்வான் பதிவு
அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், துருக்கி-சிரியா மக்களுக்காக பிரார்த்திப்பதாகவும், தனது இதயம் நொறுங்கிவிட்டதாகவும் எமோஜி பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார்.
@AP
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'துருக்கி மற்றும் சிரியா உள்ள மக்களுக்கு எனது இதயமும், பிரார்த்தனையும் செல்கிறது. நமது சகோதர, சகோதரிகளுக்கு உதவ வேண்டிய நேரம் இது. யா அல்லாஹ் பாக் ரெஹாம், அமீன்' என தெரிவித்துள்ளார்.
My heart and prayers goes out to the people in Turkey and Syria. It's time to be there for our brothers and sisters and help the earthquake victims. Ya Allah pak reham, Ameen. ??
— Muhammad Rizwan (@iMRizwanPak) February 7, 2023
@File Photo