146 ஆண்டுகால கிரிக்கெட்டில் முதல் நபர்! புதிய வரலாறு படைத்த வீரர்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சவுத் ஷகீல் தொடர்ச்சியாக 7 முறை அரைசதம் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்
கொழும்பில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்டில், பாகிஸ்தான் அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 563 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
அதிகபட்சமாக ஷாஃபிக் 201 ஓட்டங்களும், அஹ்க சல்மான் 132 (நாட் அவுட்) ஓட்டங்களும், ஷகீல் 57 ஓட்டங்களும் எடுத்தனர்.
AFP
ஷகீல் உலக சாதனை
இதில் ஷகீல் அரைசதம் விளாசியதன் மூலம் 146 ஆண்டுகால கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
அதாவது, தொடர்ச்சியாக 7 டெஸ்ட் போட்டிகளில் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர் ஷகீல் ஆவார். இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர் தான்.
ஷகீல் இதுவரை 7 போட்டிகளில் 2 சதம், 6 அரைசதம் உட்பட 875 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |