ஓய்வுபெற்ற கமாண்டோ வீட்டில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதல் - மனைவி, குழந்தைகள் பாதுகாப்பு
பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கமாண்டோ தனது மனைவி, குழந்தைகளை பாதுகாத்துள்ளார்.
பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில், ஜம்மு & காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற படை கமாண்டோ ஹவில்தார் முகமது கான் வீட்டில் பாரிய சேதம் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
ஓய்வுபெற்ற கமாண்டோ
ஹவில்தார் முகமது கான் தனது பணிக்காலத்தில் 6 பாரா சிறப்புப் படைப் பிரிவில் நியமிக்கப்பட்டார்.
"முதலில் துப்பாக்கிச் சூடு நடந்தது... நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கியது. முதலில் அது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. பின்னர், அதிகாலை 2.30 மணியளவில் சத்தம் அதிகரித்து பீரங்கி குண்டு வீச்சு தொடங்கியது" என கூறிய ஹவில்தார் கான், தனது மனைவி மற்றும் குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டு சென்று தரையில் படுக்கச் செய்ததாக தெரிவித்தார்.
"எனது வீடு சேதமடைந்தபோது நான் எனது குழந்தைகளையும் மனைவியையும் வெளியே அழைத்துச் சென்றேன். துப்பாக்கிச் சூடு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும், எனவே பாதுகாப்பாக இருப்பதற்காக தரையில் படுக்குமாறு அவர்களிடம் கூறினேன். நானும் படுத்துக் கொண்டேன்." என கூறினார்.
இந்த தாக்குதல், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்'க்கு பாகிஸ்தானின் பதில் தாக்குதலாகும்.
பஹல்காம் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பலியாகினர்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம், புதன்கிழமை அதிகாலை 1.15 மணிக்கு தாக்குதலை துவங்கி 25 நிமிடங்களில் 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதில் 70 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா குறி வைத்தது அனைத்தும் நம்பகமான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே என தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் உலக்கப்பட்டு சீரற்ற, தவறான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Operation Sindoor, Pak India border shelling, Uri shelling news, Havildar Mohd Khan, Indian Army retaliation, Pahalgam terror attack, SCALP missile strike, PoK terror camps destroyed