இந்தியாவை விட்டு வெளியேறிய பாகிஸ்தான் தொகுப்பாளினி? இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியதாக புகார்..பழைய பதிவுகளால் வந்த வினை
பாகிஸ்தானிய விளையாட்டு தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் தனது பழைய சமூக வலைதள பதிவுகளை கண்டனத்திற்கு உள்ளாகி இந்தியாவை விட்டு வெளியேறினார்.
பாகிஸ்தான் தொகுப்பாளினி
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் வர்ணனைக் குழுவில் பாகிஸ்தான் தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ் இடம்பெற்றிருந்தார்.
அவர் இந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக , டெல்லி வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
Twitter
இதற்கு காரணம் ஜைனப் அப்பாஸின் பழைய சமூக வலைதள பதிவுகள் தான். அதில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் இந்தியாவையும், இந்து மத நம்பிக்கைகளையும் அவமதிக்கும் கருத்துக்களை கூறியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை திருவிழா: மூவர் அரைசதம் விளாசல்..நெதர்லாந்துக்கு 323 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து
உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற புகார்
இதன் காரணமாக இந்தியாவுக்கு எதிரானவர்கள் இங்கு வரவேற்கப்படுவதில்லை என்றும், ஐசிசி மற்றும் பிசிசிஐ அவரை உலகக்கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் தனது புகாரில் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஜைனப் அப்பாஸ் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறியதாக சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் சர்ச்சையாகியுள்ள நிலையில் சமூக ஊடங்கங்களில் ஜைனப் அப்பாஸுக்கு எதிராக கண்டனப் பதிவுகள் வலுத்து வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |