தடுமாறும் பாகிஸ்தான் அணி: பயத்தை காட்டிய இலங்கை வீரர்
காலே டெஸ்டில் இலங்கையின் மிரட்டல் பந்துவீச்சினால் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது.
இலங்கை அணி 312 ஓட்டங்கள்
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 312 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. தனஞ்செய டி சில்வா 122 ஓட்டங்களும், விஷ்வா பெர்னாண்டோ 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் அப்ரர் அகமது தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ரஜிதா ஓவரில் இமாம் உல் ஹக் ஒரு ரன்னில் அவுட் ஆனார்.
பிரபத் ஜெயசூர்யா மாயாஜால பந்துவீச்சு
அடுத்து சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூர்யாவின் மிரட்டலில் அப்துல்லா ஷாபிக் (19), ஷான் மசூட் (39), பாபர் அசாம் (13) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இதனால் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 73 ஓட்டங்கள் என தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது 17 ஓட்டங்களில் பிரபத் ஓவரில் அவுட் ஆனார்.
இந்த நிலையில் சௌட் ஷகீல் மற்றும் அக்ஹ சல்மான் அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வருகின்றனர்.
A good session for Sri Lanka with the ball, Pakistan struggling at 132/5, trailing Sri Lanka by 180 runs. The bowlers are on ?#SLvPAK pic.twitter.com/qfmIHd0bq9
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 17, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |