இலங்கை அணியை வாஷ்அவுட் செய்து முதலிடம் பிடித்த பாகிஸ்தான்
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது.
தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்
கொழும்பில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 166 ஓட்டங்கள் எடுத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி 576 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
AFP
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 188 ஓட்டங்களில் சுருண்டது
இதனால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
புள்ளிப்பட்டியலில் முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் 24 புள்ளிகள் பெற்று, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி 9வது இடத்தில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |