இந்தியா பொய் சொல்கிறதா? ரஷ்யா, சீனா விசாரிக்க வேண்டும்! பாகிஸ்தான் அறைகூவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ரஷ்யா, சீனா விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் பரபரப்பு
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதற்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் கூறியது. எனினும் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவும், சீனாவும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் விரும்புவதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
புலனாய்வுக் குழு
பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ரஷ்ய ஊடகமான RIA Novosti செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில்,
"இந்த நெருக்கடியில் ரஷ்யா அல்லது சீனா அல்லது மேற்கத்திய நாடுகள் கூட மிகவும் நேர்மையான பங்கை வகிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்கள் ஒரு புலனாய்வுக் குழுவை அமைக்கலாம்.
இந்தியா அல்லது மோடி பொய் சொல்கிறாரா என்பதை விசாரிக்கும் இந்த பணியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஒரு சர்வதேச குழு கண்டுபிடிக்கட்டும்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |