யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம்
35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வரும் பாகிஸ்தானியர் ஒருவரை, உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஒடிசா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
சாரதா பாயின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அவர் உடனடியாக பாகிஸ்தானுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
மேலும், வெளியேற்ற உத்தரவை அவர் பின்பற்றத் தவறினால், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலக்குப் பிறகு பாகிஸ்தானை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த பொலிஸ் நடவடிக்கை உள்ளது.
பலங்கிரில் உள்ள இந்து குடும்பத்தை சேர்ந்த மகேஷ் குக்ரேஜா என்பவரை சாரதா பாய் பல ஆண்டுகளுக்கு முன்பு மணந்தார். இவர்களது மகனும் மகளும் இந்தியர்கள். வாக்காளர் அடையாள அட்டை உட்பட அனைத்து முக்கிய ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதிலும், அவருக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் தம்மை தனது குடும்பத்திலிருந்து பிரிக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தனது தாயகமாக இருந்த இந்தியாவில் தொடர்ந்து வாழ அனுமதிக்குமாறு கூப்பிய கைகளுடன் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனக்கு யாரும் இல்லை
நான் முதலில் கோராபுட்டில் இருந்தேன், பிறகு போலங்கிருக்கு வந்தேன். பாகிஸ்தானில் எனக்கு யாரும் இல்லை... என் கடவுச்சீட்டு கூட மிகவும் பழையதாகிவிட்டது. அரசாங்கத்திடமும் உங்கள் அனைவரிடமும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன், தயவுசெய்து என்னை இங்கே வாழ அனுமதிக்கவும்.
எனக்கு இரண்டு வளர்ந்த குழந்தைகள், பேரக்குழந்தைகள்... நான் இங்கு ஒரு இந்தியராக வாழ விரும்புகிறேன் என சாரதா பாய் தெரிவித்துள்ளார். இதனிடையே, அரசாங்கத்திற்கு அவர் அளித்த மனு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது, ஆனால் போலங்கிர் காவல்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |