ஜெலென்ஸ்கியுடன் வத்திக்கானில் சந்திப்பு... அடுத்து புடினை கிழித்து தொங்கவிட்ட ட்ரம்ப்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அவரைத் தூண்டிவிட்டதற்காக விளாடிமிர் புடினை ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
தீவிரமாக ஒருவரையொருவர்
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கியின் மிக மோசமான சந்திப்பிற்கு பிறகு, வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச்சடங்குகளின் போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.
புனித பீட்டர்ஸ் பேராலயத்தின் உள்ளே இந்த எதிர்பாராத சந்திப்பு நடந்தது, இருவரும் நாற்காலிகளை இழுத்துப் போட்டுக்கொண்டு தீவிரமாக ஒருவரையொருவர் உரையாடினர்.
சுமார் 15 நிமிடங்கள் நீண்ட இந்த உரையாடல், சிறப்பாக இருந்தது என்றே ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். பாப்பரசரின் இறுதிச்சடங்குகள் முடிவடைந்ததன் பின்னர், ஜனாதிபதி ட்ரம்புடனான உரையாடல் தொடர்பில் குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி,
நாங்கள் நிறைய விடயங்களை நேரில் விவாதித்தோம். நாங்கள் விவாதித்த அனைத்திற்கும் முடிவுகளை எதிர்பார்க்கிறோம். உக்ரைன் மக்களின் உயிரைப் பாதுகாப்பது முதன்மையானது என்றார்.
மேலும், முழுமையான, நிபந்தனையற்ற போர் நிறுத்தம். மற்றொரு போர் வெடிப்பதைத் தடுக்கும் நம்பகமான மற்றும் நீடித்த அமைதி. இதை நாம் கூட்டாக அடைந்தால், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட மிகவும் அடையாளச் சந்திப்பு இதுவென அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகை அதிகாரிகளும், இந்தச் சந்திப்பு குறித்து மிகவும் பயனுள்ள விவாதம் என்றே குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதன் பின்னர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதியை கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.
இறந்து கொண்டிருக்கிறார்கள்
கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், நகரங்கள் மற்றும் சிறு நகரங்கள் மீது புடின் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என தொடங்கிய ஜனாதிபதி ட்ரம்ப், ஒருவேளை அவர் போரை நிறுத்த விரும்பாமல் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
என்னையும் அவர் வழிக்கு இட்டுச்செல்ல முயன்றுள்ளார் என குறிப்பிட்டு, புடினை வங்கி அல்லது இரண்டாம் நிலைத் தடைகள் மூலம் வித்தியாசமாகக் கையாளப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பியதுடன் அதிகமான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள் என முடித்துள்ளார்.
சமீப நாட்களில் ரஷ்ய தரப்பு உக்கிரமானத் தாக்குதலை முன்னெடுத்து வருவதால், இது ஜோ பைடன் காலத்தில் தொடங்கிய போர், எனக்கு இதில் பங்கில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
தொடக்கம் முதலே ஒருவர் தோல்வியின் பக்கத்தில் இருந்தார் என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அந்த நேரத்தில் தாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால், போர் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |