பாகிஸ்தானில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு கணவன் கண்முன் நடந்த கொடூரம்!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 25 வயது கர்ப்பிணி பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஜீலம் நகரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வீட்டுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஐந்து பேர் அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரது கணவரையும் தாக்கி கயிற்றால் கட்டி வைத்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து பஞ்சாப் பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண்ணின் மருத்துவப் பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரியும் தடயவியல் பரிசோதனைக்காக லாகூர் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கடந்த மாதம் கராச்சியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஓடும் ரயிலில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அந்நாட்டில் பெண்களின் உரிமைகள் தொடர்பான பாகிஸ்தானின் மோசமான சாதனையை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயின் அப்பெண்ணை, டிக்கெட் பரிசோதகர் உட்பட மூன்று பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கராச்சியில் இருந்து முல்தானுக்கு கடந்த வாரம் அவர் பயணம் செய்தார் என்று பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. ஏர் கண்டிஷனிங் கொண்ட ஒரு வண்டிக்கு செல்லுமாறு ஆண்கள் கூறியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேரும் கற்பழிப்பு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிப்ரவரியில் பஞ்சாப் தகவல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தரவுகளின்படி, அம்மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் "குடும்பக் கௌரவம்" என்ற பெயரில் மொத்தம் 2,439 பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும், 90 பேர் கொல்லப்பட்டதாகவும் காட்டுகிறது.
கடந்த ஆண்டின் 'உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2021'-ன் படி, பாலின சமத்துவக் குறியீட்டில் 156 நாடுகளில் பாகிஸ்தான் 153-வது இடத்தைப் பிடித்துள்ளது, அதாவது கடைசி நான்கு நாடுகளில்.
பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தின் (HRCP) சமீபத்திய அறிக்கையின்படி, பாகிஸ்தானில், கடந்த ஆறு ஆண்டுகளில் (2015-21) 22,000-க்கும் மேற்பட்ட இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. அதன்படி, பாகிஸ்தானில் தினமும் குறைந்தது 11 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன.
வழக்குகளின் எண்ணிக்கை குறைவதற்குப் பதிலாக, ஒட்டுமொத்தமாக 1 சதவீதத்திற்கும் குறைவாக, அதாவது 22,000 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 77 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது.