4 பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்.! பாகிஸ்தானில் அதிரவைக்கும் சம்பவம்

Pakistan Women Video Stripped Shoplifting
By Ragavan Dec 08, 2021 12:45 AM GMT
Report

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடையில் திருடியதாக குற்றம் சாட்டி, ஒரு இளம்பெண் உட்பட 4 பெண்களை ஒரு குழுவினர் உடைகளைக் கழற்றி அடித்து இழுத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாகூரில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசலாபாத்தில் சென்ற திங்கள்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு பதின்ம வயது பெண் உட்பட 4 பெண்கள், அவர்களது உடைகள் கழற்றப்பட்ட நிலையில், தங்கள் மாணத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு துண்டு துணியாவது தருமாறு தங்களைச் சுற்றியுள்ள மக்களிடம் கெஞ்சியுள்ளனர்.

இருப்பினும் அவர்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லை, அதேசமயம் அவர்கள் மேலும் தடிகளால் தாக்கப்பட்டனர்.

அப்பெண்கள் கதறி அழுததுடன், தங்களை விடுவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை. ஒரு மணி நேரம் தெருக்களில் நிர்வாணமாக ஊர்வலமாக நடக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில பொலிஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

"இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் ஐந்து முக்கிய குற்றவாளிகளை நாங்கள் கைது செய்துள்ளோம்" என்று பஞ்சாப் காவல்துறை செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் 5 சந்தேக நபர்கள் மற்றும் பலருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்கின்படி, அவர்கள் பைசலாபாத் பாவா சாக் சந்தைக்கு குப்பைகளை சேகரிக்கச் சென்றதாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.

“தாகம் எடுத்த நாங்கள் உஸ்மான் எலெக்ட்ரிக் ஸ்டோருக்குள் சென்று தண்ணீர் பாட்டில் கேட்டோம். ஆனால் அதன் உரிமையாளர் சதாம் நாங்கள் திருடும் நோக்கத்தில் கடைக்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டினார். மார்க்கெட் பகுதி முழுக்க எங்களை அடித்து, உடைகளை கழற்றி, எங்களை வீடியோ எடுத்தனர்... இந்தக் கொடுமையை தடுக்க கும்பலில் இருந்த யாரும் குற்றவாளிகளைத் தடுக்க முயற்சிக்கவில்லை" என்று புகார் கூறப்பட்டுள்ளது.

பைசலாபாத் காவல்துறை தலைவர் டாக்டர் அபித் கான் கூறுகையில், தப்பி ஓடிய குற்றவாளிகளை கைது செய்ய சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், சதாம் உட்பட ஐந்து முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US