பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் மீதான தாக்குதல்
தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல்
தெக்ரிக்-இ-தலிபான் என்ற தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள், ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தில் உள்ள கிராமங்களில் பதுங்கி, பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் மீது அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் விமானப்படை கடந்த மார்ச் மாதம் மற்றும் நேற்று முன் தினம் இரவு ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதில் 46 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
ஆப்கானிஸ்தான் கண்டனம்
இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலிபான் அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம், இந்த தாக்குதல் வசிரிஸ்தான் அகதிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தனது எல்லைக்குள் தாக்குதல்களை நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை என்றும், இது போன்ற செயல்கள் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்றும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |