பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது
இஸ்தான்புல்லில் நடந்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
வெடித்த மோதல்
கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதில் 206 பேர் பலியாகினர். 
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் பலியாகினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.
எனினும் கத்தார், துருக்கி நாடுகள் சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கின. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
ஆனால், இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின் சமீபத்திய சுற்று உடன்பாடு இல்லாமல் முறிந்துள்ளது. இது இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அவநம்பிக்கையை ஆழமாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்றும், ஆப்கானிஸ்தான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம் எனவும் ஆப்கானிஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |