சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமான படை - 30 பேர் உயிரிழப்பு; என்ன காரணம்?
பாகிஸ்தான் விமான படை குண்டு வீசியதில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் விமான படை குண்டுவீச்சு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள திரா பள்ளத்தாக்கில், பாகிஸ்தான் விமான படை இன்று அதிகாலை 2 மணிக்கு குண்டு வீசியுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட J-17 போர் விமானங்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 8 LS-6 குண்டுகளை லேசர் உதவியுடன் துல்லியமாக வீசியுள்ளது.
இந்த தாக்குதலில், பெண்கள் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்ககூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப், இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
என்ன காரணம்?
இங்கு ஆப்கானிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் தெஹ்ரீக்-இ-தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளதாகவும், அதனை குறி வைத்தே இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதில், பதுங்கியுள்ள 2 பயங்கரவாத தளபதிகள் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருவதாகவும், குண்டுகளை மசூதிகளை சேமித்து வைப்பதாகவும் காவல்துறை அதிகாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |