மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை

Pakistan Afghanistan
By Arbin Mar 17, 2026 03:10 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மருத்துவமனை ஒன்றின் மீது நடந்த வான்வழித் தாக்குதலில் பல நூறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலேயே

வெளியான தகவலின் அடிப்படையில் 400 பேர்கள் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலேயே மிக அதிக உயிர்ப்பலியை ஏற்படுத்திய சம்பவம் இதுவென்றும் கூறுகின்றனர்.

மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை | Pakistan Air Strike Killed 400

2021-ஆம் ஆண்டில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், ​​காபூல் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 169 ஆப்கான் பொதுமக்களும் 13 அமெரிக்கப் படைவீரர்களும் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, தற்போது பாகிஸ்தானின் குண்டு வீச்சில் பல நூறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால், மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றே பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காபூலிலும், கிழக்கு ஆப்கானிய மாகாணமான நங்கஹாரிலும் உள்ள இராணுவத் தளங்கள் மீதும், பயங்கரவாத ஆதரவு உள்கட்டமைப்பு என்று குறிப்பிட்டவற்றின் மீதும் தாக்குதல் நடத்தியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் விவகாரம்... அனைத்துத் தரப்பினரிடமும் தொடர்பில் உள்ளோம்: சீனா அறிவிப்பு

ஹார்முஸ் விவகாரம்... அனைத்துத் தரப்பினரிடமும் தொடர்பில் உள்ளோம்: சீனா அறிவிப்பு

இதனிடையே, ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவரான ஹம்துள்ளா ஃபித்ரத் தெரிவிக்கையில், உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 9 மணியளவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல், 2,000 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனையின் பெரும் பகுதிகளைச் சேதப்படுத்தியது.

பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு

இதுவரை பலி எண்ணிக்கை 400 கடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 250 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

போதை மருந்து சிகிச்சை முன்னெடுக்கப்படும் அந்த மருத்துவமனையில் சுமார் 2,000 பேர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளார். மேலும், கொடுமைகளை இழைப்பதற்காக, மருத்துவமனைகளையும் பொதுமக்கள் இடங்களையும் பாகிஸ்தான் குறிவைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய மிக மோசமான குண்டு வீச்சு... 400 கடந்த பலி எண்ணிக்கை | Pakistan Air Strike Killed 400

தாக்குதலில் உயிரிழந்தவர்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனையின் நோயாளிகள் என்றும் அவர் கூறினார். இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபின் செய்தித் தொடர்பாளர் மொஷர்ரஃப் ஜைதி, காபூலில் எந்த மருத்துவமனையும் குறிவைக்கப்படவில்லை என்று கூறி, காபூலின் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என நிராகரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US