சமூக ஊடகங்களுக்கு தடை..!புனித காலத்தை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு பரிந்துரை
இஸ்லாமிய புனித காலத்தை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு சமூக வலைதளங்களை தடை விதிக்க பரிந்துரைத்துள்ளது.
சமூக ஊடகங்களுக்கு தடை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, யூடியூப், வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் போன்ற சமூக வலைதள தளங்களை ஆறு நாட்கள் தடை செய்ய பரிந்துரைத்துள்ளது.
இந்த தற்காலிக தடை ஜூலை 13 முதல் 18 வரை முஹர்ரம் எனும் இஸ்லாமிய புனித காலத்தில் "வெறுப்புணர்ச்சி பரப்பிக்கும் செய்திகள்" மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக பஞ்சாப் மாநில முதலமைச்சர் Maryam Nawaz தலைமையிலான அரசு, பிரதமர் Shehbaz Sharif தலைமையிலான தேசிய அரசிடம் ஒப்புதல் கோரி வருகிறது.
இந்த தேசிய அளவிலான தடைக்கு பாகிஸ்தான் இராணுவத் தலைவர் ஜெனரல் ஆசிம் முனீர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேர்தல் தலையீடு குறித்த கவலைகளைத் தொடர்ந்து மத்திய அரசு எக்ஸ் சமூக வலைதளத்தை நான்கு மாதங்களுக்கு மேலாக தடை செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |