எதிரிகளால் பேரிழப்பு.... சர்வதேச நாடுகளிடம் நிதியுதவி கோரிய பாகிஸ்தான்
எதிரிகளால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, சர்வதேச நேச நாடுகளிடம் பாகிஸ்தான் அரசு கூடுதல் நிதியுதவிகளைக் கோரியுள்ளது.
உலக நாடுகளிடம் கடன்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் முன்னெடுத்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியா சிந்தூர் நடவடிக்கை என பதிலடி அளித்துள்ளது.
இதற்கு பாகிஸ்தான் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு தமது சமூக ஊடகப் பக்கத்தில் உலக நாடுகளிடம் கடன் கேட்டு பதிவிட்டுள்ளது.
Govt of Pakistan appeals to International Partners for more loans after heavy losses inflected by enemy. Amid escalating war and stocks crash, we urge international partners to help de-escalate. Nation urged to remain steadfast. @WorldBank #IndiaPakistanWar #PakistanZindabad
— Economic Affairs Division, Government of Pakistan (@eadgop) May 9, 2025
அதில், எதிரிகளின் தாக்குதல் மற்றும் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்புகளால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இழப்புகளை எதிர்கொள்ள சர்வதேச நேச நாடுகள் கடனுதவி அளிக்க முன்வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
போருக்கும் தீவிரவாதத்திற்கும்
ஆனால் சமூக ஊடகப் பயனர்கள் பலர் இதற்கு கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சொந்த மக்களுக்கு செலவிடுவதற்கு பதிலாக பாகிஸ்தான் ராணுவம் போருக்கும் தீவிரவாதத்திற்கும் பணத்தை செலவிடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புதன்கிழமை இரவு முதல் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் சிந்தூர் நடவடிக்கையால், பாகிஸ்தானில் உள்கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் அல்லது அப்பாவி பொதுமக்களுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |