RCBயை வழிநடத்தியவரை புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்த பாகிஸ்தான்
நியூசிலாந்தின் மைக் ஹெஸனை தலைமை பயிற்சியாளராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியமித்துள்ளது.
பயிற்சியாளர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து சொதப்பி வந்த நிலையில் கேரி கிரிஸ்டன் பதவி விலகினார்.
அவரைத் தொடர்ந்து நியமிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவின் ஜேசன் கில்லெஸ்பியும் சில நாட்களிலேயே வெளியேறினார்.
இதனால் இடைக்கால பயிற்சியாளராக பாகிஸ்தானின் ஆகிப் ஜாவித் நியமிக்கப்பட்டு பதவி வகித்து வந்தார்.
மைக் ஹெஸன்
இந்த நிலையில், பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெஸன் (Mike Hesson) நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் 2019-23யில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு முன்பு பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார்.
மேலும், தற்போது பாகிஸ்தானின் கிளப் அணியான இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |