அச்சுறுத்தும் நகரம் என்றால் அது அகமதாபாத்தான்- பாக். கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேத்தி
பாகிஸ்தான் வீரர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் நகரம் என்றால் அது அகமதாபாத்தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேத்தி பேச்சால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
வலுக்கும் சர்ச்சை
6 அணிகள் கலந்து கொள்ளும் 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, 2023ம் ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது என்று தெரிவித்தார்.
மேலும், பொது இடத்தில்தான் இந்தியா - பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்றார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையாக விமர்சனம் செய்தது. முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக ஜெய்ஷாவை தாக்கி பேசினர்.
இந்த சர்ச்சையால், கிரிக்கெட் கவுன்சில் நிர்வாகிகள் தலையிட்டு கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஆனால், இக்கூட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் முரண்பட்ட கருத்தை கொண்டிருந்ததால், எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக் கோப்பை ரத்து?
சமீபத்தில் பொதுவான இடத்தில் விளையாடும் யோசனையே வேண்டாம் என்று பிசிசிஐ நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதனால், ஆசிய கோப்பை தொடர் ரத்தாக வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இதற்கு பதிலாக 5 நாடுகளை உள்ளடக்கிய தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
நஜம் சேத்தி கருத்து
பாகிஸ்தான் வீரர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும் நகரம் என்றால் அது அகமதாபாத்தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஜம் சேத்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
இந்தியாவில் பாகிஸ்தான் அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கும் என நாங்கள் கருதும் ஒரே நகரம் அகமதாபாத்தான். அங்குதான் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது.
இந்த செய்தியை பார்த்ததும், ‘இந்தியாவுக்கு வந்துவிடாதீர்கள்’ என்று மறைமுக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் மறைமுகமாக சொல்ல எதுவும் கிடையாது என தோன்றியுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்தால் நியாயமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.