உங்க தங்கத்தை கடனாக கொடுங்க! பொதுமக்களிடம் கேட்கும் நாடு... எதற்காக தெரியுமா?
அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிக்க பொதுமக்களிடம் தங்கத்தை கடனாக வாங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையிலேயே இதை பாகிஸ்தான் அரசு செயல்படுத்துகிறது.
பாகிஸ்தான் ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி, அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 17 பில்லியன் டொலராக சரிந்தது. இதையடுத்து பாகிஸ்தான் ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் பொருளாதார முதன்மைக் குழுவினருடன் இம்ரான்கான் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு நிதியமைச்சர் சவுகத் தாரின், வர்த்தக வங்கிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து தங்கத்தை டெபாசிட்டுகளாகப் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் அந்நியச் செலாவணிக் கையிருப்பை உயர்த்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தங்கம் மற்றும் நகைகள் விற்பனைக்கு 17 சதவீத விற்பனை வரியை அரசாங்கம் விதித்தது குறிப்பிடத்தக்கது.