பாகிஸ்தான்-வங்காளதேசம் இரகசிய பாதுகாப்பு கூட்டணி: இந்தியா கவலையுடன் கண்காணிப்பு
இந்திய பாதுகாப்பு துறையை அதிரவைக்கும் வகையில், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச இராணுவங்களுக்கிடையில் இரகசிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 ஏப்ரல் 15 முதல் 19 வரை பாகிஸ்தான் விமானப்படையுடன் வங்காளதேச விமானப்படையினர் நடத்திய ரகசிய சந்திப்பின் விவரங்கள் இந்திய புலனாய்வு அமைப்புகளால் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், ட்ரோன் ஸ்வார்மிங், தானியங்கி ஆயுதங்கள், சைபர் போர் மற்றும் குறியீட்டு தகவல் தொடர்பு போன்ற நவீன போர் உத்திகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான், சீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது ட்ரோன் திறன்களை மேம்படுத்தி வரும் நிலையில், இத்தொழில்நுட்பங்களை பங்களாதேஷுக்கு மாற்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும், இருநாடுகளும் சேர்ந்து Tactical Air Data Link System எனப்படும் குறியீட்ட தகவல் தொடர்பு முறையை உருவாக்கும் பணியில் ஈடுபட உள்ளன.
இதுபோக, பாகிஸ்தான் offensive cyber பயிற்சிகள், malware-resistant protocols போன்றவை வழங்க முன்வந்துள்ளது.
முக்கியமாக, வங்காளதேச ஜனாதிபதி ஷாஹபுதீனின் பதவி நீக்கம் செய்யப்பட்டு மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பது பிரிவுடன் நெருக்கம் உள்ள ஒருவரை பதவியில் நியமிக்க முயற்சி செய்யப்படுகிறது என்றும் தகவல் உள்ளது.
இந்த நெருக்கம் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு புது சவாலாக விளங்குகிறது. சீனாவின் பின்னணி ஆதரவு மற்றும் ஐ.எஸ்.ஆர். (ISR) புலனாய்வு தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை இந்தியா தொடர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan Bangladesh defence deal, Drone warfare technology sharing, Tactical Air Data Link system, India intelligence leak 2025, Bangladesh cyber warfare ties, Shahabuddin removal conspiracy, Pakistan China military support, India national security concern