கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவை:பரபரப்பான ஆட்டத்தில்..6 ரன்னில் இலங்கை தோல்வி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
வணிந்து ஹசரங்கா அபாரம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. 
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ஓட்டங்கள் குவித்தது. சல்மான் ஆகா (Salman Agha) 105 (87) ஓட்டங்களும், ஹுசைன் தலத் 62 (63) ஓட்டங்களும் விளாசினர். வணிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் கமில் மிஷாரா 38 ஓட்டங்களில் வெளியேற, குசால் மெண்டிஸ் முதல் பந்தியிலேயே டக்அவுட் ஆனார். அடுத்து நிசங்கா 29 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.
எனினும் சதீரா சமரவிக்ரமா 39 ஓட்டங்களும், சரித் அசலங்கா 32 ஓட்டங்களும் எடுக்க அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
அதே சமயம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கடுமையான நெருக்கடி கொடுத்தனர். 
இதனால் ஒருபுறம் இலங்கை அணி விக்கெட்டுகளையும் இழந்தது. அரைசதம் விளாசிய வணிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga) 52 பந்துகளில் 59 ஓட்டங்கள் (7 பவுண்டரிகள்) எடுத்திருந்தபோது நசீம் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகள்
49 ஓவர்கள் வரை இலங்கை 9 விக்கெட் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 21 ஓட்டங்கள் தேவை என்பதால் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இருந்த தீக்ஷணா 2 ஓட்டங்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என அதிரடி காட்ட, கடைசி பந்தில் 9 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் 2 ஓட்டங்கள் மட்டுமே இலங்கை அணிக்கு கிடைக்க, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளும், நசீம் ஷா மற்றும் ஃப்ஹீம் அஸ்ராஃப் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
𝐀 𝐓𝐇𝐑𝐈𝐋𝐋𝐄𝐑 𝐈𝐍 𝐑𝐀𝐖𝐀𝐋𝐏𝐈𝐍𝐃𝐈 💥
— Sportskeeda (@Sportskeeda) November 11, 2025
Pakistan defeated Sri Lanka by 6 runs in the first ODI to take a 1-0 lead in the three-match series. 🏆✅#Cricket #ODI #PAKvSL #Sportskeeda pic.twitter.com/hzAi5qUZSV
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |