பெற்ற தாய் உட்பட மொத்த குடும்பத்தையும் சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவன்! பகீர் கிளப்பும் சம்பவம்
பாகிஸ்தானின் லாகூரில் வசித்துவரும் 14வயது சிறுவன் பப்ஜி விளையாட்டில் அடிமையானதை தொடர்ந்து தனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் நஹீத் முபாரக்(45) என்பவர் கணவரை பிரிந்து லாகூரில் தனது நான்கு மகன், மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் லாகூர் பொலிஸ் நிலையத்திற்கு நஹீத் முபாரக் மற்றும் அவரது குழந்தைகள் கொலை செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், நஹீத் முபாரக்(45) அவரது (22) வயது மகன் தைமூர், (17) மற்றும் (11) வயதான மகள்கள் சுட்டுக்கொல்லப்பட்டு இருந்தனர்.
நஹீத் முபாரக்கின் மூன்றாவது மகன் மட்டும் உயிர் தப்பிய நிலையில் அவனிடம் விசாரணை நடத்தினர். தான் மாடியில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்ததாகவும், தனக்கு எதுவும் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளான்.
அதன் பின் வீட்டில் சோதனையை தீவிரப்படுத்திய பொலிசார், நஹீத் முபாரக்கின் வீட்டு சாக்கடையில் துப்பாக்கியும். ரத்தம் படிந்த துணியையும் கைப்பற்றினர். பொலிசாருக்கு அந்த 14 வயது சிறுவன் மீது சந்தேகம் அதிகரிக்க, அந்த சிறுவனிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அந்த விசாரணையில் தான் பப்ஜி விளையாடுவதை தாய் கண்டித்து தனக்கு கோபமூட்டியதால், நஹீத் முபாரக் பாதுகாப்பிற்காக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவரை கொன்றதாகவும், அதனை பார்த்த அண்ணன் தைமூர் மற்றும் தனது 17 வயது அக்கா மற்றும் 11 வயது தங்கை ஆகிய மூன்று பேரையும் சுட்டுக்கொன்றேன் என தெரிவித்துள்ளான்.
இதனை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அனைத்து பெற்றோர்களையும் கவலை அடைய வைத்துள்ளது