பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குலைக்கப் படலாம்.., நடிகர் பார்த்திபன் கருத்து
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில் பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குலைக்கப் படலாம் என்று நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
பார்த்திபன் பதிவு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது. அதுவும் கடந்த 36 மணி நேரத்தில் நிலைமை மோசமடைந்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் முறியடித்து தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
பாகிஸ்தான் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் இந்திய ராணுவ நடவடிக்கையால் வெற்றிகரமாக அழிக்கப்பட்டன.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "பாக்கி இல்லாமல் பாகிஸ்தான் சீர்குலைக்கப் படலாம். இந்தியாவின் பழிக்குப் பழி படலத்தில் பதுங்குக் குழியில் பாக். பிரதமர் ஒதுங்கி ஓரோரமாய் குந்திகினு இருப்பதாக ஒரு தகவல்.
போர் முறையுடன் அனுகும் நம் இந்தியாவை எதிர்கொள்ள இயலாத பாக், நம் பொதுமக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறது.
அதை நம் வான்வெளி அதிரடி yes! S -400 வானிலேயே சுட்டு வீழ்த்தி (காறி துப்பியது போல்) நெருப்பு எச்சிலாய் தரையில் வீழ்த்துவதை மொபைல் திரையில் பார்க்கும் போதே பரவசம் ஆகிறது.
ஆயினும் ஆயினும் உலக நாடுகள் ஒன்றினைந்நு பாக் அராஜகத்திற்கு தீர்வு சொல்லி மக்களின் அமைதியை உறுதி செய்ய வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |