இந்திய விமானியை பாகிஸ்தான் சிறைபிடித்ததா? இராணுவ அதிகாரி அளித்த விளக்கம்
இந்தியாவிற்கு எதிரான சமீபத்திய மோதலில் பாகிஸ்தான் எந்த இந்திய விமானியையும் சிறைபிடிக்கவில்லை என்பதை அந்த நாட்டின் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய பெண் விமானி
இந்தியா மீது பாகிஸ்தான் நடத்திய பதிலடித் தாக்குதலுக்குப் பிறகு, ஷிவாங்கி சிங் என்ற இந்திய பெண் விமானி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டதாகக் கூறும் ஊகங்களும் பல காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், ஞாயிறன்று ஊடகங்களை எதிர்கொண்ட பாகிஸ்தான் இராணுவ செய்தித்தொடர்பாளரிடம் இந்த விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அத்துடன், போர் நிறுத்தம் உறுதி செய்துள்ள நிலையில், அவர் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவாரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்தே, இந்திய விமானி எவரும் தங்களிடம் காவலில் இல்லை என்பதை இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.
பத்திரமாக இருப்பதாக
மட்டுமின்றி, வெளியான தகவல் அனைத்தும் சமூக ஊடகத்தில் பரவும் புரளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசாங்கமும் இந்த விவகாரத்தில் சமூக ஊடகப்பதிவுகள் போலியானது என்று கூறியுள்ளது, மேலும் தவறான தகவல்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
ஆனால் விமானி ஷிவாங்கி சிங் தாம் பத்திரமாக இருப்பதாக இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பதுடன், தனிப்பட்ட தகவல் எதையும் அவர் வெளியிடவும் இல்லை.
இதனிடையே, சிந்தூர் நடவடிக்கை நீடிப்பதாக இந்திய விமானப்படை கூறியுள்ளதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான், தங்களின் இராணுவம் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, எந்த ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஷிவாங்கி சிங் இந்தியாவின் முதல் ரஃபேல் விமானி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |