மத்திய கிழக்கில் அமைதிக்காக பாகிஸ்தான்-சீனா வெளியிட்ட 5 அம்ச திட்டம்
மத்திய கிழக்கில் தொடர்ந்து நடைபெறும் போர் மற்றும் பதற்றத்தை குறைக்க பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து 5 அம்சங்களைக் கொண்ட அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளன.
இந்த திட்டத்தில் முதன்மையாக உடனடி போர்நிறுத்தம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உயிரிழப்பைத் தடுக்கவும், பிராந்தியத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இது அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது அம்சமாக, அமைதி பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

மூன்றாவது அம்சம், மனிதாபிமான உதவி தடையின்றி வழங்கப்பட வேண்டும் என்பதாகும். உணவு, மருந்து, மருத்துவ உதவி போன்றவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சென்றடைய வேண்டும் என திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்காவது அம்சம், பிராந்திய நிலைத்தன்மை. வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இணைந்து செயல்பட்டு, நீடித்த அமைதியை உறுதி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐந்தாவது அம்சம், சர்வதேச ஒத்துழைப்பு. ஐ.நா. மற்றும் முக்கிய நாடுகள் இந்த அமைதி முயற்சியில் பங்கு கொள்ள வேண்டும் என பாகிஸ்தான்-சீனா வலியுறுத்துகின்றன.
பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் டார் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரின் கூட்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகளாவிய அமைதி முயற்சியில் இது ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |