சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் - பாகிஸ்தான் பின்னடைவு
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் அணி சரிந்துள்ளது.
பாகிஸ்தான் பின்னடைவு
கடந்த வெள்ளிக்கிழமை 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், நியூசிலாந்தை 102 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தி தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனைப் படைத்தது. இந்த சாதனை 2 நாட்கள் கூட நீடிக்கவில்லை.
நேற்று நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் எதிர்கொண்டது. இப்போட்டியின் முடிவில் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது.
இந்த முதலிடம் 48 மணி நேரத்தில் பாகிஸ்தான் அணி இழந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்திற்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி இந்த தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணி பின்னடைந்தது. தற்போது, அவுஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும், பாகிஸ்தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
@AbdullahOrkzy23
#ICC Announce latest ODI team rankings.
— Surinder (@navsurani) May 8, 2023
In new ranking #Pakistan slip to 3rd position.
Pakistan just stay 2 day on Number I position.
Bcz yesterday they lost to #NewZealand in the 5th ODI.#ICCRankings pic.twitter.com/NOnnnb98px
Just a few days after achieving the feat, Pakistan lost its top status in the ICC Men's ODI team rankings after falling to New Zealand in the final ODI of the five-match series. The Babar Azam-led team took the top spot after defeating New Zealand inhttps://t.co/zjS1AZ1Kvu pic.twitter.com/8u2PBy5yOR
— Cricket Mood (@Cricketmood) May 8, 2023