விராட் கோலி முன்பு போல் இல்லை..! மிகவும் அமைதியாகிவிட்டார்: பாகிஸ்தான் வீரர் கருத்து
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முன்பு போல் இல்லை, மிகவும் அமைதியாகி விட்டார் என பாகிஸ்தான் வீரர் இமான் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல்
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 12வது போட்டி இன்று அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன, இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
#CWC23 ?
— Peshawar Zalmi (@PeshawarZalmi) October 14, 2023
?????
Match Update
Pakistan: 37/0 after 7 Overs
Confident start by our opening batters ?#INDvPAK #Zalmi #YellowStorm pic.twitter.com/O3o6FZV8fv
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கியுள்ள பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 9 ஓவர்கள் முடிவில் 48 ஒட்டங்களை குவித்து விளையாடி வருகிறது.
கோலி முன்பு போல் இல்லை
இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்ன நினைக்கிறார் என்று கூறும் வீடியோ தொகுப்பு ஒன்றை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டு உள்ளது.
இந்த வீடியோ நேர்காணலில் பேசிய பாகிஸ்தான் வீரர் இமான் உல் ஹக், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன், அவர் தோல்வியை எப்போது ஒப்புக் கொள்ள மாட்டார், தொடர்ந்து வெற்றிக்காக போராடுவார்.
விராட் கோலி அவுஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடும் போது அவுஸ்திரேலிய வீரர்களுக்கு எதிராக ஸ்லெட்ஜிங் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் தற்போது விராட் கோலி முன்பு போல் இல்லை, மிகவும் அமைதியாகி விட்டார்.
விராட் கோலி போல் திறமை கொண்ட பேட்ஸ்மேன்கள் பலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கலாம், ஆனால் கோலிக்கு இருக்கும் வெறி மற்றும் மன வலிமை யாருக்குமே கிடையாது என இமான் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |