காசா முழுவதும் பறந்த துண்டு பிரசுரங்கள்: பாலஸ்தீன மக்களுக்கு விடுக்கப்பட்ட வித்தியாசமான எச்சரிக்கை
காசாவின் தெற்கு பகுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு துண்டு பிரசுரங்களை வானில் இருந்து வீசி இஸ்ரேலிய விமானப்படை எச்சரித்துள்ளது.
சிதையும் காசா நகரம்
இஸ்ரேல் படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் காசா படைகளுக்கும் இடையே சண்டை நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலிய ராக்கெட்டுகள் காசா நகரை முழுவதுமாக சிதைத்து வருகிறது.
இஸ்ரேலிய ராக்கெட்டுகளால் உருக்குலைந்து கிடக்கும் காசா நகரத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
UN: Israel has ordered 1.1 million residents of the northern Gaza Strip to evacuate in the next 24 hours.
— NEXTA (@nexta_tv) October 13, 2023
Hamas urges residents of the northern Gaza Strip not to evacuate, claiming it is "psychological warfare" by the IDF.
A spokesman for UN Secretary-General Stephane Dujarric… pic.twitter.com/BArPJcV4DE
இதற்கிடையில் நேற்று 1 மில்லியன் பாலஸ்தீன மக்களை 24 மணி நேரத்திற்குள் காசாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு பகுதிக்கு இடம்பெயருமாறு இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
இதன் மூலம் பாலஸ்தீன மக்கள் அதிக அடர்த்தியாக வசிக்கும் வடக்கு காசா நகரத்தில் இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக கூறப்படுகிறது.
காற்றில் பறந்த துண்டு பிரசுரங்கள்
இந்நிலையில் காசாவின் தெற்கு பகுதியில் இருந்து உடனடியாக பாலஸ்தீன மக்கள் வெளியேறுமாறு வலியுறுத்தி இஸ்ரேலிய விமானப்படை துண்டு பிரசுரங்களை வானில் இருந்து வீசி எச்சரித்துள்ளது.
இந்த துண்டு பிரசுரங்கள் காசா நகரம் முழுவதும் காற்றில் மிதந்த வண்ணம் எங்கும் காணப்படுகிறது.
The Israeli Air Force dropped leaflets in the Gaza Strip urging residents to evacuate to the south
— NEXTA (@nexta_tv) October 13, 2023
Israel will destroy the Hamas regime and destroy its military capabilities, the country's defense minister said. pic.twitter.com/Z8Ozqqzxar
இதற்கிடையில் பாலஸ்தீனத்தில் ஹமாஸின் ஆட்சியை நீக்கி அதன் இராணுவ படையை முற்றிலுமாக அழித்து விடுவோம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |