கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்: இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இதுவரை கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இதுவரை 1,799 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கும் போர் தாக்குதல்
இஸ்ரேலிய ராணுவ படைகளுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 8வது நாளாக தீவிர சண்டை நடைபெற்று வருகிறது.
காசாவின் எல்லைப் பகுதியில் இசை திருவிழா நடைபெற்று கொண்டு இருக்கும் போது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் அமைப்பினர் தங்கள் தாக்குதலை திடீரென தொடங்கினர்.
இதையடுத்து இஸ்ரேலில் போர் பிரகடனம் அறிவிக்கப்பட்டு பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
1799 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் இதுவரை 1,799 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
The Gaza Health Ministry said Israel's airstrikes killed 1,799 Palestinians and injured 6,388. pic.twitter.com/nYvbuOfx7l
— NEXTA (@nexta_tv) October 13, 2023
மேலும் 2 லட்சம் மக்கள் இருப்பிடத்தை விட்டு இடம்பெயர்ந்து இருப்பதுடன், 6,388 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலை பொறுத்தவரை குறைந்தபட்சமாக 1300 பேர் உயிரிழந்துள்ளனர், அத்துடன் 3,227 பேர் போர் நடவடிக்கையால் காயமடைந்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |