பஹல்காம் தாக்குதல் என் இதயத்தை நொறுக்கியது: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் வேதனையடைந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இந்தியாவைத் தாண்டி சர்வதேச அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனங்களையும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விராட் கோஹ்லி, அனில் கும்ப்ளே, இர்பான் மற்றும் யூசுப் பதான் ஆகியோரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
முகமது ஹபீஸ் வேதனை
பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்தார்.
Sad & heartbroken 💔 #PahalgamTerroristAttack
— Mohammad Hafeez (@MHafeez22) April 23, 2025
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் (Mohammad Hafeez) பஹல்காம் தாக்குதல் குறித்து பதிவிட்டுள்ளார்.
அவரது எக்ஸ்தள பதிவில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வேதனையை அளித்தது மற்றும் இதயத்தை நொறுக்கியது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |