பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் - முன்னாள் மனைவி குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என முன்னாள் மனைவி குற்றச்சாட்டியுள்ளார்.
இமாத் வசிம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான இமாத் வசிம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 55 ஒருநாள் மற்றும் 75 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வ பெறுவதாக அறிவித்த அவர், PSL போன்ற லீக் தொடர்களில் விளையாடி வருகிறார்.
இமாத் வசிமுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் சன்னியா அஷ்பக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது.

2025 ஆம் ஆண்டின் இறுதியில் சன்னியா அஷ்பக்கை பிரிவதாக அறிவித்த இமாத் வசிம், தற்போது நைலா ராஜா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கட்டாய கருக்கலைப்பு
இந்நிலையில், இமாத் வசிமின் முதல் மனைவியான சன்னியா அஷ்பக் இமாத் வசிம் ஒரு கொலைகாரர், என் குழந்தையை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார்" என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மேலும், இன்ஸ்டாகிராமில் அவருடைய 2வது திருமண வீடியோவை பகிர்ந்த சன்னியா, இப்போது எல்லோரும் ஆதாரத்தை பார்த்துவிட்டார்கள். இவர் என் குழந்தைகளைப் பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை.
ஏமாற்றுக்காரன் இறுதியாக அம்பலப்படுத்தப்பட்டான், என் குழந்தைகளுக்கும், நாங்கள் அனுபவித்த அனைத்திற்கும் நீதி வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
மற்றொரு பதிவில், "டிசம்பர் 2023 இல், அவர் லாகூரில் என் குழந்தையை கருக்கலைப்பு செய்தார். அவர் ஒரு கொலைகாரன், அதை நிரூபிக்கும் வீடியோ என்னிடம் உள்ளது. அவர் என்னை ஏமாற்றினார்.
ஒரு கொலைகாரனுக்கும் ஒரு ஏமாற்றுக்காரனுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. எந்த ஏமாற்றுக்காரனோ அல்லது கொலைகாரனோ தப்பிக்கக்கூடாது" என அவர் விளையாடும் இஸ்லாமாபாத் யுனைடெட்டை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
இமாத் வசிம் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இமாத் வசிம், "தோல்வியடைந்த திருமண வாழ்வுக்குப் பிறகு, என் வாழ்க்கையின் கடினமான பகுதியில் இருந்தேன். இருந்தாலும், அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களான என் குழந்தைகளைக் கொடுத்தது. அவர்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு நேசிக்கிறேன், அந்த அன்பு ஒருபோதும் மாறாது.

என் கால தாமதமும் அமைதியும், ஒரு அப்பாவி நபர் காரணமற்ற விமர்சனத்திற்கு ஆளவதற்கு வழிவகுத்தது. அல்லாஹ்வின் அருளாலும், என் பெற்றோரின் வழிகாட்டுதலாலும், நான் இப்போது நைலாவை மணந்தேன்.
நைலா என் வாழ்க்கையில் அமைதி, கண்ணியம் மற்றும் வலிமையைக் கொண்டு வந்துள்ளார், மேலும் நான் இந்த முடிவில் முழு உறுதியுடன் நிற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |