சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படும் பாகிஸ்தான் ராணுவ படை: வெளியான முக்கிய அறிவிப்பு
Pakistan Deploys Military to Saudi Arabia: சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பலப்படுத்த பாகிஸ்தான் அரசு, தன் ராணுவ படைகளை அனுப்பியுள்ளது.
சவுதி அரேபியாவில் அனுப்பப்படும் பாகிஸ்தான் ராணுவம்
பாதுகாப்புப் பிரச்சினைகள் பலவற்றை எதிர்கொள்ளும் வகையில், சவுதி அரேபியாவின் தற்காப்புத் திறனை பலப்படுத்தும் வகையில் பாகிஸ்தான், தன் ராணுவப் படைகளை அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் ஆயுதப்படை செய்திகள் பிரிவு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சவுதி அரேபியாவின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லைகளைப் பாதுகாப்பதில் இஸ்லாமாபாத் கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பு, இந்தப் படைப் பரிமாற்றம் வெளிப்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால மூலோபாய கூட்டணி மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சகோதரத்துவ உறவின் அடிப்படையிலேயே இந்த ராணுவ ஒத்துழைப்பு வழங்கப்படுகிறது.
மேலும், சவுதி அரேபியா மற்றும் புனிதத் தலங்களான ஹரமைன் ஷெரீஃபைன் ஆகியவற்றின் புனிதத்தைப் பாதுகாப்பதில் பாகிஸ்தான் எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு கட்டமைப்பிற்கு உட்பட்டு, சவுதி எல்லைக்குள் மட்டுமே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை இந்தப் படையினர் மேற்கொள்வார்கள் என ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது.