அம்பலமான பாகிஸ்தான்... ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் TRF அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரிவு 370 ரத்து
இது பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் அளிக்கும் அழுத்தமான சமிக்ஞை என்றே கூறப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் TRF அமைப்பு முன்னெடுத்த தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமியான TRF அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளதை இந்தியாவும் வரவேற்றுள்ளது.
TRF அல்லது The Resistance Front என்ற இந்த அமைப்பானது 2019ல் பிரிவு 370 ஐ இந்திய அரசாங்கம் ரத்து செய்ததன் பின்னர் உருவானதாகும்.
1948 ஆம் ஆண்டு அப்போதைய ஜம்மு-காஷ்மீர் ஆட்சியாளரான ராஜா ஹரி சிங், இணைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு, ஜம்மு காச்ஜ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிய பிறகு, இந்தப் பிரிவு இணைக்கப்பட்டது.
ஆனால் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக லஷ்கர்-இ-தொய்பா என்ற பயங்கரவாதக் குழுவிற்கு புதிய ஒரு அடையாளம் தேவைப்பட்டது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளித்ததற்காக பாகிஸ்தான் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) கண்காணிப்பின் கீழ் வந்த நேரமும் இதுதான்.
இதில் உறுதியான தரவுகளின் அடிப்படையில், பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் இணைத்தது FATF. கறுப்புப் பட்டியலில் தரமிறக்கப்பட்டிருந்தால், அந்த நாடு அனைத்து நாடுகளாலும் தடை செய்யப்படலாம், மேலும் அந்த நாட்டிற்கு பலதரப்பு கடனோ அல்லது எந்த வகையான பொருளாதார உதவியோ கிடைக்காது.
ஐ.எஸ்.ஐ-யிடமிருந்து ஆயுதங்கள்
இதனால் இஸ்லாமிய அடைமொழிகள் ஏதுமின்றி, ஒரு தனித்துவமான அமைப்பாக TRF உருவானது. அத்துடன், உள்ளூர் இளைஞர்களை மட்டுமே அந்த அமைப்பில் இணைத்துக்கொண்டனர். இருப்பினும் அந்த அமைப்பின் தலைவர்களாக அல்லது முக்கிய பொறுப்புகளில் லஷ்கர் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகளில் இருந்து வந்தவர்களே இடம்பெற்றனர்.
பாகிஸ்தானில் பயிற்சி முன்னெடுத்த TRF அமைப்பிற்கு பாகிஸ்தான் இராணுவத்தின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீஸ் இன்டலிஜென்ஸ் அல்லது ஐ.எஸ்.ஐ-யிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் உளவுத்துறை தகவல்கள் அளிக்கப்பட்டது.
2020 ஏப்ரல் 1ம் திகதி குப்வாராவின் கெரான் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) அருகே நான்கு நாள் துப்பாக்கிச் சண்டையை முன்னெடுத்ததை அடுத்து TRF ஊடக வெளிச்சம் பெற்றது. குறித்த துப்பாக்கிச் சண்டையில் ஐந்து இந்திய பாரா கமாண்டோக்களும் ஐந்து TRF பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2020ல் கெரான் என்கவுண்டர், 2020ல் ஹந்த்வாரா என்கவுண்டர், 2022ல் செடோவ் ஷோபியன் ஐஇடி தாக்குதல், 2023ல் அனந்த்நாக் என்கவுண்டர், 2024ல் ரியாசி தாக்குதல் மற்றும் தற்போது பஹல்காம் தாக்குதல் உள்ளிட்டவையில் TRF ஈடுபட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |