கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று
உலக வங்கியிடம் கடன் வாங்கி செயற்படும் பாகிஸ்தான், எதிர்வரும் செப்டம்பர் 23 வரையில் இந்திய விமான சேவைகளுக்கு தங்கள் வான் பரப்பில் தடை விதித்துள்ளது.
இந்திய விமான சேவைகளுக்கு
குறித்த முடிவை பாகிஸ்தான் விமான சேவை நிர்வாகம் விமானிகளுக்கான புதிய ஒரு NOTAM அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. இந்திய விமான சேவைகளுக்கு ஏற்கனவே அமுலில் இருக்கும் தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இந்தியாவிற்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட பயணிகள் மற்றும் இராணுவ விமானங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் என்றே அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரு மாதத்திற்கு என முதலில் இந்தத் தடை அமுலுக்கு வந்தது.
இந்த நடவடிக்கை இந்திய விமானங்கள் மற்றும் விமான சேவைகள் பாகிஸ்தான் எல்லைக்குள் பறப்பதைத் தடை செய்தது. சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 30 ஆம் திகதி, பாகிஸ்தான் விமான சேவைகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கும் இந்தியா இதே தடையை அறிவித்தது.
4.10 பில்லியன் இழப்பு
ஆனால் ஏப்ரல் 23 தொடங்கி இரண்டு மாதங்களில் மட்டும் பாகிஸ்தான் நிர்வாகத்திற்கு இதனால் 4.10 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
பாகிஸ்தானின் இந்த நகர்வால் இந்திய தரப்பில் 100 முதல் 150 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. இழப்புகள் ஏற்பட்ட போதும், பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 ல் 508,000 அமெரிக்க டொலரிலிருந்து 2025 ல் 760,000 டொலராக அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, 2019 ல், எல்லை தாண்டிய பதட்டங்கள் காரணமாக வான்வெளி மூடப்பட்ட பின்னர் பாகிஸ்தான் 54 மில்லியன் டொலர் இழப்பை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |