முதல் நிலவு பயணத்தை தொடங்கவுள்ள பாகிஸ்தான் - நிலவுக்கு செல்லும் ஜின்னா 1
pakistan 1st moon rover jinnah-1 : ஜின்னா 1 மூலம் 2029 ஆம் ஆண்டில் தனது முதல் நிலவு பயணத்தை பாகிஸ்தான் தொடங்க உள்ளது.
முதல் நிலவு பயணத்தை தொடங்கவுள்ள பாகிஸ்தான்
2008 ஆம் ஆண்டிலே சந்திராயன் 1 திட்டம் மூலம் இந்தியா நிலவுக்கு செயற்கைகோளை அனுப்பி ஆய்வு செய்ததோடு, 2023 ஆம் ஆனதில் சந்திரயான்-3 மூலம், நிலவின் தென் துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றது.

பாகிஸ்தான் தனது முதல் நிலவு பயணத்தை 2029 ஆம் ஆண்டில் சீனாவின் சாங் இ-8 விண்கலத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜின்னா 1(Jinnah-1) என அழைக்கப்படும் இந்த நிலவு ஊர்தியானது நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சவாலான நிலப்பரப்பு, முக்கியமான கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து 4,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்ற, நாடு தழுவிய போட்டி ஒன்றின் மூலம் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

7 பங்கேற்பாளர்களால் தனித்தனியாக முன்மொழியப்பட்ட “ஜின்னா-1” மிகவும் தனித்துவமான தேர்வாக உருவெடுத்தது.
இந்தப் பெயர், பாகிஸ்தானின் நிறுவனரான முகமது அலி ஜின்னாவைக் குறிக்கிறது.
இந்த ரோவர், பாகிஸ்தானிய பொறியாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் நிலவு அறிவியல் மற்றும் ஆழ்விண்வெளிச் செயல்பாடுகள் ஆகியவற்றில் மதிப்புமிக்க அனுபவத்தை வழங்கக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |