தென் ஆப்பிரிக்காவை தரைமட்டமாக்கி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்! சொந்த மண்ணில் முதல் முறை
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.
143 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இக்பால் மைதானத்தில் நடந்தது. 
அப்ரார் அகமது, நவாஸ், அப்ரிடி ஆகியோரின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா 37.5 ஓவர்களில் 143 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக குயிண்டன் டி காக் (Quinton de Kock) 53 (70) ஓட்டங்களும், பிரிட்டோரியஸ் 39 (45) ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளும், அப்ரிடி, நவாஸ் மற்றும் சல்மான் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 25.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளுக்கு 144 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடர் நாயகன்
சைம் அயூப் (Saim Ayub) 77 ஓட்டங்களும், மொஹம்மது ரிஸ்வான் 32 ஓட்டங்களும், பாபர் அஸாம் 27 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் முதல் முறையாக 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
குயிண்டன் டி காக் தொடர் நாயகன் விருதை பெற்றார். தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக முறை (7) தொடர் நாயகன் விருது பெற்ற இரண்டாவது வீரர் இவர்தான். ஷான் பொல்லாக் முதலிடத்தில் (8 முறை) உள்ளார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |