1000க்கும் அதிகமானோரை பலி கொண்ட வெள்ளம்: பாகிஸ்தானுக்கு பிரித்தானிய மகாராணி ஆறுதல்

Boris Johnson United Kingdom Pakistan Queen Elizabeth II Death
By Thiru Aug 29, 2022 09:50 PM GMT
Report

பாகிஸ்தான் மக்களுக்கு பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் ஆறுதல்.

இக்கட்டான சூழ்நிலையில் பிரித்தானியா பாகிஸ்தானுடன் ஒற்றுமையாக நிற்கும் என உறுதி.

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தில் 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதற்கு பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஆழ்ந்த வருத்ததை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஜூன் நடுப்பகுதியில் இருந்து பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏறக்குறைய 300,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் ஏராளமான சாலைகள் செல்ல முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதுடன், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

1000க்கும் அதிகமானோரை பலி கொண்ட வெள்ளம்: பாகிஸ்தானுக்கு பிரித்தானிய மகாராணி ஆறுதல் | Pakistan Floods 1000 People Dead Uk Queen SaddenedAP

பல்வேறு பகுதிகளில் புதிய இறப்புகள் பதிவாகி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 1,061 பேரை எட்டியுள்ளது.

இந்தநிலையில், 1,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது மற்றும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வீடுகளை சேதப்படுத்திய பாகிஸ்தானின் வரலாறு காணாத கனமழையால் தாம் மிகவும் வருத்தப்படுவதாக பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு அனுப்பிய கடிதத்தில், பாகிஸ்தான் முழுவதும் வெள்ளத்தால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு மற்றும் அழிவைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

1000க்கும் அதிகமானோரை பலி கொண்ட வெள்ளம்: பாகிஸ்தானுக்கு பிரித்தானிய மகாராணி ஆறுதல் | Pakistan Floods 1000 People Dead Uk Queen SaddenedGETTY

அத்துடன் இந்த பயங்கரமான நிகழ்வுகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும்போது பிரித்தானியா பாகிஸ்தானுடன் ஒற்றுமையாக நிற்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும், மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிபவர்களுடனும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: உலகின் மிக சக்திவாய்ந்த ராக்கெட்... விண்வெளி ஏவுதல் இறுதி நேரத்தில் ஒத்துவைக்கப்பட்டது ஏன்?

1000க்கும் அதிகமானோரை பலி கொண்ட வெள்ளம்: பாகிஸ்தானுக்கு பிரித்தானிய மகாராணி ஆறுதல் | Pakistan Floods 1000 People Dead Uk Queen SaddenedAP

இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது ஆதரவு செய்தியை வெளியிட்டுள்ளார், அதில் பாகிஸ்தானில் வெள்ளம் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதைப் பார்க்கும்போது மனவேதனை அளிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US