சீனாவின் Z-10ME-02 ஹெலிகாப்டரை வாங்கும் பாகிஸ்தான் - இந்தியாவிற்கு எதிரான நகர்வு
இந்தியாவிடம் சிந்தூர் இயக்கத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தான், தனது இராணுவ சக்தியை மேம்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக, சீனாவில் தயாரிக்கப்பட்ட Z-10ME-02 தாக்குதல் ஹெலிகாப்டர் பாகிஸ்தானின் படையினருக்கு சேர்க்கப்பட்டுள்ளது.
Multan விமானத் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் படைத்தலைவர் சயீத் ஆசிம் முனீர் தலைமையில் இது அறிமுகம் செய்யப்பட்டது.
Z-10ME-02 ஹெலிகாப்டர் 7.2 டன் எடையுள்ள இரட்டை இஞ்சின் ஹெலிகாப்டர், 1500 கிலோவரை சுமக்கக்கூடிய திறன் கொண்டது. இது எதிரியின் குண்டுகள், டாங்கிகள் மற்றும் விமானங்களை அழிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் anti-tank guided missiles, laser-guided rockets, air-to-air missiles போன்ற நவீன ஆயுதங்கள் உள்ளன. மேலும், இது non-line-of-sight (NLoS) தாக்குதலை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
இந்தியா Vs பாகிஸ்தான்
பாகிஸ்தான் தற்போது சீனாவின் அழுத்தத்தில் இந்த ஹெலிகாப்டர்களை ஏற்றுக்கொண்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே 2021-ல் சோதனைக்காக வந்த Z-10 ஹெலிகாப்டர்கள் செயல்திறன் குறைவால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தன.
இந்தியாவின் Apache AH-64E ஹெலிகாப்டர், அமெரிக்காவின் முன்னணி போர் ஹெலிகாப்டர் ஆகும். இது 10.4 டன் எடை, 2500 கிலோவுக்கு மேல் ஆயுதங்களை சுமக்கும் திறன், Hellfire, Hydra, Longbow radar ஆகியவற்றுடன் உள்ளது.
மேலும், இந்தியாவின் சொந்த உற்பத்தியான LCH Prachand ஹெலிகாப்டர், சிறப்பாக மலைப்பகுதிகளில் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உயரமான நிலப்பரப்பில் சிறந்த தாக்குதலை தரும் என இந்தியா நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Z-10ME helicopter Pakistan, China Pakistan military deal, Z-10ME vs Apache comparison, India Apache helicopter strength, LCH Prachand vs Z-10ME, Z-10ME-02 features, Apache AH-64E in Indian Army, Pakistan army helicopter news, China attack chopper export, India vs Pakistan defence comparison