இம்ரான் கானை கொல்ல சதி? பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சதி திட்டம் தீட்டப்படுவதாக வெளியான தகவலால், அந்நாட்டில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இம்ரான் கானை கொல்ல சதி திட்டம் தீட்டப்படுவதாக பரவிய தகவலைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகவே, தலைநகர் இஸ்லாமாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளார். மேலும், பானி காலா பகுதிக்கு இம்ரான் கான் வருவார் என கூறப்படும் நிலையில், அப்பகுதியில் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையில் இம்ரான் கானின் மருமகனான ஹசன் நியாசி, தங்கள் கட்சி தலைவருக்கு ஏதேனும் நேர்ந்தால் அது பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலாக கருதப்படும் என்றும், அதற்கு பதிலடி மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும், அதனால் கையாள்பவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
(File Image)
மேலும், இஸ்லாமாபாத்தின் பரேட் மைதானத்தில் நடந்த பேரணியின் போது குண்டு துளைக்காத கண்ணாடிகளைப் பயன்படுத்துமாறு இம்ரான் கான் அறிவுறுத்தப்பட்டார் என பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவர் பைசல் வவ்டா கூறியுள்ளதும் பாகிஸ்தானில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Photo Credit: AP/PTI