சாம்பியன்ஸ் டிராபியால் பாகிஸ்தானுக்கு ரூ.869 கோடி இழப்பு - இந்தியாதான் காரணமா?
சாம்பியன்ஸ் டிராபி நடத்தியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர், பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற்றது.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் முறையில் நடைபெற்ற இந்த தொடரை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தனது நாட்டில் உள்ள ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மைதானங்களை மேம்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 58 மில்லியன் டொலர் செலவு செய்துள்ளது.
மேலும், நிகழ்வு தயாரிப்புக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. அதேவேளையில் இந்த தொடரின் டிக்கெட் விற்பனை மற்றும் ஸ்பான்சர்ஷிப் மூலம் 6 மில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமே வருமானம் கிடைத்துள்ளது.
ரூ.869 கோடி இழப்பு
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.869 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை ஈடுகட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்களின் ஊதியத்தை குறைக்க 87.5 சதவீதம் குறைக்கவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, தற்போது ஒரு போட்டியில் விளையாடினால் ரூ.40,000 பெரும் வீரர்களுக்கு, இனிமேல் ரூ.10,000 மட்டுமே ஊதியமாக வழங்க முடிவெடுத்துள்ளது.
மேலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தியாதான் காரணமா?
பாதுகாப்பு காரணங்களை காட்டி, இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்ததால், ஹைபிரிட் முறையில் போட்டிகளை துபாயில் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடியிருந்தால், இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது என கூறப்படுகிறது.
ஹைபிரிட் முறையில் போட்டியை நடத்த, ஐசிசி வலியுறுத்திய போதே இதனால் எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால் பிசிசிஐக்கு, ஐஐசியில் இருந்த செல்வாக்கு காரணமாக, ஹைபிரிட் முறையில் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இழப்பை சந்தித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |